ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – ஹெல்த் சீகிரெட்

  • Written By: Last Updated:
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் –  ஹெல்த் சீகிரெட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் பிரபல நடிகர் தனுஷை கடந்த ௨௦௦4 ஆம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதையடுத்து குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இந்திய திரையுலகத்தினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை ஒன்று சேர்ப்பதற்கு நட்பு வட்டாரத்தினரும், குடும்பத்தினரும் முயன்றும் அவர்கள் இணைய மறுத்து விட்டனர்.

இப்பொழுது அவரவர் வேளைகளில் மிகவும் பிஸியாகி விட்டனர்.

ஐஸ்வர்யா தனது பட இயக்கம் மற்றும் இசை ஆல்பம் போன்ற வேலைகளில் களம் இறங்கி கலக்கி வருகிறார். கணவர் தனுஷும் தன் வேலைகளில் பிஸியாகி ஹாலிவுட் படங்களில் தனது புகழை பரப்பி வருகிறார். தமிழில் அவருடைய அடுத்த படம் திருச்சிற்றம் படம் வெளிவர உள்ளது.

ஐஸ்வர்யா தனது வேலைகளுக்கிடையே தன் ஆரோக்கியத்தையும் பிட்னெஸ்ஸையும் கடைபிடித்து வருகிறார். ஓய்வு நேரத்தில் தனது மகன்களுடன் நேரத்தை கழிப்பதும் ஒர்கவுட், சைக்ளிங் மற்றும் யோகா செய்து அதை இணையத்தில் வெளியிடுகிறார்.

தற்போது இணையத்தில் தனது ரசிகர்களையும் உடற்பயிற்சி செய்யுமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஒருவர் 108 முறை சூரிய நமஸ்கரங்களை செய்து வந்தால் அவரின் உடலின் மேற்பகுதியும் அத்துடன் அவர் வாரத்தில் மூன்று நாட்கள் ஸ்கேவாட் செய்து வந்தால் உடலின் கீழ்பகுதியும் வலுப்பெறும் என்று கூறியுள்ளார். அதற்கு பிறகு யோகவா அல்லது ஜிம்மோ? அவரது உடலே கூறும் என்றும் இதனால் நாம் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

follow us