OTTயில் வெளியாவதற்கு முன்னரே ஆன்லைன்யில் HD குவாலிட்டி யில் விக்ரம்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் புதன்கிழமையன்று, சமீபத்திய தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. அந்த வெளியீட்டில், விக்ரம் ஜூலை 8 ஆம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாகி ஐந்து வாரங்கள் ஆகிய நிலையில் இது மாநில வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அதன் உலகளாவிய வெற்றியானது கமலின் நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கையில் எண்ணற்ற புதிய வசூல் சாதனைகளை படைத்துள்ளது.
எந்த மொழியானாலும் சரி எவ்வளவு பெரிய பட்ஜெட் திரைப்படம் ஆனாலும் சரி, அதிகாரப்பூர்வ டிஜிட்டல் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடுவதற்கு முன்பே, கிட்டத்தட்ட எல்லா படங்களும் HD பிரிண்ட்டுகளுடன் சில திருட்டு தளங்களில் ஆன்லைனில் கிடைத்துவிடுகிறது. இப்பொழுது திடுக்கிடும் தகவல் என்னவென்றால், சமீபத்திய சூப்பர்ஹிட் படமான விக்ரம் OTT தளங்களில் வெளியிடப்படும் தேதியை அறிவிப்பதற்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது என்பது தான்.

இந்தியாவில் மட்டும் விக்ரம் படத்தின் வசூல் ரூபாய் 290 கோடி என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியா முழுவதும் ஜூன் 3 ஆம் தேதி, படம் பெரும் ஆரவாரத்துடன் வெளியிடப்பட்டது, மேலும் எல்லா திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன, விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படம் தமிழ்நாட்டில் 172 கோடி ரூபாயும், தெலுங்கு மாநிலங்களில் 38 கோடி ரூபாயும், கேரளாவில் 39 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 24 கோடி ரூபாயும், ஹிந்தியில் 16.5 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது என வர்த்தக அறிக்கைகள் கூறுகின்றன. இது விக்ரம் படக்குழுவினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்