கேப்டன் மில்லர் – தனுஷின் அடுத்த படம்.

Dhanush - Captain Miller
Dhanush - Captain Miller

நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டுருக்கிறார்.

தமிழ் திரையுலகத்தின் பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகனுமான தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனிக்கிழமை அன்று தனது அடுத்த படத்தின் பெயர் விடியோவை வெளியிட்டுருக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸின் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் கேப்டன் மில்லர். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அருண் தியாகராஜன் அவர்கள். இப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கிய சமீப திரைப்படம் ‘சாணி காயிதம்’. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். தனுஷ் இந்த படம் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்றும் இப்படத்திற்காக விறுவிறுப்பாக காத்திருப்பதாகவும் போஸ்ட் செய்திருக்கிறார். இந்த வீடியோவில் தனுஷ் ஒரு கொள்ளைக்காரன் போல் முகத்தை மறைத்தும் அவர் தோள்களில் துப்பாக்கியும் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் செல்வது போல் இருக்கிறது. இந்த படம் 1930 மற்றும் 1940 களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் தனுஷும் இணையும் முதல் படமாகும். பிரபல வசனகர்த்தா மதன் கார்க்கி இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவர் சூப்பர் ஹிட் படங்களான பாஹுபலி RRR மற்றும் புஷ்பா உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இப்படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் தனுஷின் முதல் ஹாலிவூட் திரைப்படம் ‘தி க்ரேய் மேன்’ ஜூலை 2022 நெட்ப்பிலிக்ஸில் வெளியாக உள்ளது. தனுஷின் ரசிகர்கள் இன்ஸ்டாக்ராமில் இதற்கு மிகுந்த ஆதரவை கொடுத்து வருகிறார்கள். அவர்கள் இப்படத்தை காண மிகுந்த ஆவலாக இருப்பதாக கமென்ட் செய்ந்திருக்கிறார்கள். கேப்டன் மில்லர் வெற்றியடை வாழ்த்துக்கள்